அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் ஒரு மலையில் படப்பிடிப்பு நடத்திய குழு கடும் வெப்பநிலை தாக்கத்தில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2704 அடி உயரத்தில் ஒரு மலை அமைந்திருக்கிறது. அந்த மலையில் செங்குத்தான பாறைகள் இருக்கிறது. அங்கு தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி படப்பிடிப்பதற்காக, கடும் சிரமங்களை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு குழுவினர் அங்கு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் திடீரென்று 108 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகரித்தது. இதனால், சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. எனவே, மீட்பு படையினர் ட்ரோன்கள் மூலமாக அவர்களை கண்டுபிடித்து ஹெலிகாப்டரில் மீட்டிருக்கிறார்கள்.