மிகப் பெரிதான ஒரு சிறு கோள் பூமியை நோக்கி வருவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
நாசா எனும் அமெரிக்க விண்வெளி நிறுவனம், மிகப்பெரிதான விண்வெளி சிறுகோளான 388945, வரும் 16ஆம் தேதி அதிகாலையில் நம் பூமியை நெருங்கும் என்று கூறியிருக்கிறது. அந்த சிறுகோளானது, 1608 அடி அகலம் உடையது எனவும் நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போன்று 1454 அடி உயரத்தில் இருக்கிறது எனவும் ஈபிள் கோபுரத்தை விட பெரிதானது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சிறுகோள் இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் வருடம் மே மாதத்தில் பூமிக்கு மிகவும் அருகே சுமார் 1.7 மில்லியன் மைல் தூரத்தில் சென்றிருக்கிறது. இதே போன்று அடுத்த தடவை வரும் 2024 ஆம் வருடத்தில் சுமார் 6.9 மில்லியன் மைல்கள் தொலைவில் இந்த சிறுகோள் பூமியைத் தாண்டி செல்லும் என்று கூறப்படுகிறது. ஒரு சிறுகோளானது, பூமியிலிருந்து சுமார் 4.65 மில்லியன் மைல்கள் தொலைவில் செல்வது ஆபத்து என்று விண்வெளி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.