Categories
உலக செய்திகள்

“ஆபத்து”…! வாட்டி வதைக்கும் குளிர்…அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..! “பேரிடர்” மாகாணமாக அறிவிப்பு…!

கடும் குளிர் மற்றும் பனி பொழியும் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

இதனால் டெக்சாஸ் மாகாணத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெக்சாஸ் மாகாணத்திற்கு ஜோ பைடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கடும் பனிப்பொழிவால் டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் 30 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா முழுவதும் 58 பேர் பலியாகியுள்ளனர்.

Categories

Tech |