அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டான் பிராட்மேனின் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில், முச்சதம் அடித்ததன் மூலம் வார்னர் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
வார்னரின் சாதனைகள்:
- ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை வார்னர் படைத்துள்ளார். முன்னதாக, டான் பிராட்மேன் 299 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
![]()
- பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி 302 ரன்கள் அடித்திருந்த நிலையில், தற்போது வார்னர் 335 ரன்கள் அடித்ததன் மூலம் அவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
- பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு நாளில் அதிக ரன்கள் அடித்த அசார் அலியின்(156 ரன்கள்) மற்றொரு சாதனையையும் வார்னர் தகர்த்தார். வார்னர் முதல் நாளில் 166 ரன்கள் எடுத்திருந்தார்.
![]()
அடிலெய்டு டெஸ்டில் ஆடுவதற்கு முன், பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 199 ரன்கள் எடுத்திருந்த வார்னர் 24.87 ஆவரேஜ் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி, வார்னர் – மார்னஸ் லபுஸ்சாக்னே(361 ரன்கள்) ஜோடியாகும். முன்னதாக, அலெஸ்டர் குக் – ஜோ ரூட்(248 ரன்கள்) எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.