Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே இது… DMKவின் தேர்தல் வாக்குறுதி…! விவசாயிகளை நெகிழச் செய்த தமிழக அரசு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில்,  ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள்.

இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படுகிறது. பதிவு செய்து காத்திருக்கக் கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் அப்படிங்கறது தான் தேர்தல் வாக்குறுதி.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய வகையில் தான் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூரில் ஏறத்தாழ 20 ஆயிரம் விவசாய பெருமக்கள் நேரில் இலவச மின் இணைப்பு  உத்தரவை பெறுவதற்காக அந்த அரங்கத்தில் கலந்து கொள்கிறார்கள். மீதம் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு படிப்படியாக ஆணைகள் வழங்கப்படும்.

50, 000 விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு,  நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. இணைப்பு கொடுப்பதற்காக ஒரு சிலருக்கு ஒரு கம்பம் போட வேண்டி இருக்கும். ஒரு சிலருக்கு பல மின் கம்பம் போட வேண்டி இருக்கும். அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட பிறகு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இலக்கின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று இப்பொழுது நடைபெற்று இருக்கக்கூடிய ஆய்வுக்கு கூட்டத்தில் நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |