Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… இப்படியும் ஒரு இசை ஆல்பமா…. கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியரின் புதிய முயற்சி…. குவியும் பாராட்டு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பகுதியில் டாக்டர் அப்தூல் ஹலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் சாதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்‌. இவர் தற்போது பியானோ, டிரம்ஸ் மற்றும் தவில் போன்றவற்றை வைத்து ஒரு புதிய இசையில் ஓணான் மற்றும் பாம்பு இடம் பெற்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தை கின்னஸ் சாதனை படைத்த ஆரிப் இப்னு, சுஜீத், ஹரிஷ், அவினாஷ், விஷ்வ தர்ஷினி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

அதோடு ஆப்பிரிக்கன் பாம்பு மற்றும் ஓணானும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தி இந்தியன் பீட்டில்ஸ் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இசை ஆல்பத்தில் இசை கலைஞர்கள் வாசிக்கும் போது அந்த இசைக்கு மயங்கி ஓணான் மற்றும் பாம்பு வலம் வருகிறது. மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியும், உலகில் அன்பு மற்றும் சமாதானம் பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளதாக ஆசிரியர் டாக்டர் அப்துல் ஹலீம் கூறியுள்ளார். இவர் தயாரித்த இசை ஆல்பத்தை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |