மதுரை மாவட்டத்தில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய காட்சி காண்போரை வியக்க வைத்தது.
மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. அப்போட்டி சாதாரண போட்டியாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியுள்ளனர். இக்காட்சி காண்போரை வியக்க வைத்தது.
பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். அதன் பிறகு போட்டி நிறைவடைந்தவுடன் இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் ஷீல்ட் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. பல்வேறு யோகாசனம் செய்து இந்திய அளவில் மற்றும் தேசிய அளவில் சாதனை படைத்து விருதுகளைப் பெற்ற அசார் மற்றும் சல்மான் சகோதரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.