Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே..! இப்படியும் ஆசிரியரா ? விவசாயிகளுக்காக அர்ப்பணிப்பு… பேராசிரியருக்கு குவியும் பாராட்டு …!!

விவசாயிகள் போராட்டத்துக்கு மதிப்பளித்து தூத்துக்குடி பேராசிரியர் சாப்பிடாமல் அர்ப்பணித்து இருந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும்பொருட்படுத்தாமல் 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக டிராக்டர் பேரணியை டெல்லியில் நேற்று நடத்தினர். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த தடுப்பை மீறி விவசாயிகள் நுழைய முயன்றால் காவல்துறையினர் விவசாயிகளின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்தனர். இதனால் விவசாயிகளின் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வலுத்த போராட்டம்:

விவசாயிகளின் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியால் வெகுண்டெழுந்த தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்காக பேராசிரியர் : 

இதனிடையே டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியராகவும், நாட்டுநலப்பணி திட்ட அலுவலராகவும் பணிபுரிந்து வரும் சுரேஷ் பாண்டி என்ற பேராசிரியர்… தினமும் இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார்.

ஏறக்குறைய வார கணக்கில் அவர் எடுத்த இந்த முயற்சியால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை கோவில்பட்டியிலுள்ள ஜெய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அனுமதிகப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் மோசமான நிலையை அடைந்த பேராசிரியருக்கு மருத்துவமனை நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை வழங்கி வந்தது.

இதையடுத்து பேராசிரியர் சுரேஷ் பாண்டியின் இந்த முயற்சி குறித்து தெரிந்த மருத்துவர் பிரபாகரன் விவசாயிகளின் போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று பேராசிரியர் சுரேஷ் பாண்டியிடம் மருத்துவக் கட்டணம் செலுத்த வேண்டாம், இலவசமாக மருத்துவம் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு ஆதரவாக நம்முடைய நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் காட்டுகிறது.

தொடர்ந்து சமூக சேவையில்: 

பேராசிரியர் சுரேஷ் பாண்டி இதுபோன்று விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டும் போராட்டத்தில் ஈடுபடாமல், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, தனது கல்லூரியில் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் ஒருங்கிணைந்து நிதிகளை திரட்டி அதனை கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து கேரள முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினார்.

https://www.itamilnews.in/tuticorin-college-fulfilling-the-request-of-the-chief-minister-of-kerala.php

அதேபோன்று தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொது, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது பேராசிரியர் சுரேஷ் பாண்டி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வீடு வீடாகவும், கடை கடையாக வும் சென்று அரிசி, பருப்பு போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், நிதி திரட்டி மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிகவும் ஏழ்மையில் வாடும் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவியையும் செய்து வந்துள்ளார்.

கேரள முதல்வர் வேண்டுகோள்.... நிறைவேற்றிய தூத்துக்குடி கல்லூரி... குவியும்  பாராட்டு...!! • Seithi Solai

கொரோனா பெருந்தொற்று உலகையே தும்சம் செய்த போது நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது கல்விநிலையம் அடைக்கப்பட்டதால் மாணவர்கள், ஆசிரியர்கள் வீட்டிலே முடங்கினர். அந்த நேரத்தில் தனக்கு வந்த 3மாத சம்பளத்த்தில் கஷ்டப்பட்ட 72 கல்லூரி மாணவர்களின் வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறிய ”பாடம் எடுக்காமல் சம்பளம் எதற்கு ?”  என்ற கருத்து இவரை கல்லூரி முழுவதும் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டி, மாணவர்களின் ரோல் மாடல் என பேச வைத்தது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு: 

ஆசிரிய பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற பொன்மொழிக்கிணங்க ஆசிரியர் பணியை தேர்வு செய்யும் சமூகப் பார்வை உடைய ஆசிரியர்களும், நாட்டுக்காக பல தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்து வருகின்றனர். இது போன்ற ஆசிரியர்களின் செயலால் மாணவர்களுக்கு நல்ல ஒரு ஊக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வருங்கால மாணவர்களிடையே ஒரு சமூக சேவை உணர்வை ஊட்டுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். இதையடுத்து இந்த ஆசிரியரின் அர்ப்பணிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும்  தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |