Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! தமிழகத்துக்கு நிறையா திட்டம்… தெறிக்கவிடும் மோடி அரசு… மாஸ் காட்டிய எல்.முருகன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுடைய கனவு இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை நாம் நடைமுறை படுத்திக் கொண்டிருக்கின்றோம். திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அந்த அந்த  மாநில அரசுகள். இந்த மாநில அரசாங்கங்கள் நம்முடைய நிதியை முறையாக பயன்படுத்தி அந்தத் திட்டங்களை தரத்தோடு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நோக்கோடு பணிகளை செய்ய வேண்டும்.

என்னுடைய துறை சார்ந்த திட்டங்கள் நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கேன்.  மத்திய அரசாங்கம் பட்ஜெட் அறிவிப்பில், தமிழகத்தில் மொத்தம் 5 மீன் பிடித்து துறைமுகங்களை அதிநவீன படுத்துவது. அதில் சென்னை மீன்பிடி துறைமுகம் அதற்கான திட்ட அறிக்கை மற்றும் அதற்கான நிதியும் சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டது, பணியும் தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் கடல்பாசி என்று சொல்லக்கூடிய ”எக்கனாமிக்ஸ் மல்டி பார்க்” ராமநாதபுரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசாங்கம் திட்ட அறிக்கை கொடுத்திருக்கிறது. கூடிய சீக்கிரம் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று சொல்லிக்கொண்டு, இந்த எட்டு ஆண்டுகளில் மீன்வளத்துறையில் மட்டும் கிட்டத்தட்ட 1,800 கோடி அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் இப்படி நம்மளுடைய  உட்கட்டமைப்புக்கென  14 ப்ராஜெக்ட்களை  தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்திருக்கிறது,  அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் இது போன்ற  திட்டங்களையும்,  நாம் உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்களை விரிவு படுத்துவதற்கான திட்டங்களையும் நாம் செய்கிறோம். மோடி அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களினுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாம் மிக முன்னுரிமை கொடுத்து,   திட்டங்களை நினைவுபடுத்தி இருக்கின்றோம். இன்றைக்கு மிகப்பெரிய கவனம் கொடுப்பது உட்கட்டமைப்பு வசதி தான்.

மதுரை – கொல்லம் எக்ஸ்பிரஸ் ஹைவே கொடுத்து இருக்கிறோம். சென்னை – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஹைவே கொடுத்து இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும்,  இந்தியா முழுவதும் நான்கு வழி சாலைகளை நாம் அதிகமாக கொடுத்திருக்கின்றோம். திட்டத்தை இப்போ நீங்கள் சொல்லுகின்ற திட்டம் தமிழக அரசாங்கம் கைவிட்டு இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிவிட்டு அடுத்த நிலைமைக்கு எடுத்து செல்ல முழு முயற்சிகளையும் எடுத்துவிட்டு சொல்லுகின்றோம்.

2014க்கு முன்னாடி மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது என்பது ஒரு வாடிக்கையாக இருந்தது. 2014 க்கு பிறகு மீனவர்கள் மீது தாக்குதல்கள் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. மீனவர்கள் கைது செய்வது, அப்படி கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நாம் விடுவித்துக் கொண்டு வந்திருக்கின்றோம். இப்போ 15 நாள்ல அல்லது 20 நாளில் கொண்டு வந்து இருக்கின்றோம்.

ஆனால் அந்த நாட்ல ஒரு சட்டத்தை போட்டு இருக்கிறார்கள். நம்மளுடைய போட்களை பறிமுதல் செய்யக்கூடிய சட்டத்தை போட்டு இருக்கிறார்கள். தங்களுடைய போட்களை வாங்க நாம பேசி தீர்க்க வேண்டியதாக இருக்கிறது. அதற்காக நாம் ஒரு ஜாய்ண்ட் கமிட்டியும் போட்டு இருக்கிறோம். அந்த ஜாய்ண்ட் கமிட்டியானது அப்பப்போ பேசிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கே தெரியும் இலங்கையினுடைய சூழ்நிலைகள், அந்த ஜாய்ண்ட் கமிட்டி கூட்டங்கள் நடைபெறும் பொழுது இதை நாம் வலியுறுத்தி மீனவர்கள் பாதுகாப்பை  உறுதி செய்யலாம் என  கூறினார்.

Categories

Tech |