Categories
இந்திய சினிமா சினிமா

அடடே….! படக்குழுவினருக்கு பிரபல நடிகருடன் உணவு பரிமாறிய ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஜோதிகா பர்த்டே.. 'காதல்' பரிசு கொடுத்த மம்மூட்டி.. ஹாஷ்டேக்கே  டிரெண்டாகிடுச்சே! | Mammootty and Jyothika upcoming movie title and first  look out now - Tamil Filmibeat

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஜோதிகா பிறந்தநாளன்று வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளை நடிகர் மம்முட்டி நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் பணியாற்றிய  சக ஊழியர்களுக்கு நடிகை ஜோதிகா மற்றும் மம்முட்டி இருவரும் உணவு பரிமாறினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய மம்முட்டி, ஜோதிகா - வைரலாகும் புகைப்படம்..!

Categories

Tech |