நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படக்குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.
இந்நிலையில் புஷ்பா படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.