பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் நாகன் – பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நாதன் – பழனியம்மாள் தம்பதியினரின் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் இவர்களின் குடும்பத்தினர் யாரும் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதனை அடுத்து சேதமடைந்த வீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வந்து பார்வையிட வேண்டும் எனவும், தங்களுக்கு உரிய நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த தம்பதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.