Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேதமான பாலம்…. ரூ8,00,00,000 ஒதுக்கீடு….. சரி செய்ய தாமதம்….. 10 ஊர் கிராம மக்கள் அவதி….!!

ஈரோட்டில் பழுதடைந்த பாலத்தை  சரி செய்யக்கோரி 10 ஊர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு உள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக  புதிய பாலம் கட்ட டெண்டர் விட்டு பல மாதங்களாகியும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது அப்பாலத்தை  போக்குவதற்கு பயன்படுத்தி வரும் மற்ற கிராம மக்களை அவதிக்குள்ளாகியுள்ளது. மன்னடி சாலையில் உள்ள அந்தப் பாலத்தில் ஓட்டை விழுந்ததால் போக்குவரத்துக்கு  2018 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து புதிய பாலம் கட்ட எட்டுக் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது 10 கிராம மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அவதியை குறைக்கவும், விபத்து  ஏற்படாமல் தடுக்கவும் கட்டுமான பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10 ஊர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |