Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

டெய்லி டிப்ஸ் : உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளும்….. அதற்கான தீர்வுகளும்….!!

உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கூடிய இயற்கை மருத்துவ குறிப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கண் நோய்கள் : 

பசுவின் பாலை,  நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு, இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால் கண் நோய்கள் அகலும்.

 ஏப்பம் : 

அடிக்கடி ஏப்பம் வருகிறதா ? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

நினைவாற்றல் : வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 

வேனல் கட்டி :

 வேனல் கட்டியாக இருந்தால், வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும், சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் வேனல்கட்டி சரியாகும். 

வயிற்றுப் போக்கு :

 கறிவேப்பிலையை அம்மியில் வைத்து, அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 

பீட்ரூட் :

இன்று பெரும்பாலானோர் அவதிப்பட கூடிய ஒரு பிரச்சனை என்றால் வயிற்றுப் புண் பிரச்சினை தான். பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 

உடல் மெலிய :

 கொழுகொழுவென குண்டாக இருப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் உடலில் தொடர்ந்து ஏற்படும். குறிப்பாக இதய பிரச்சினைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடல் இறுகி, மெலிய, கொள்ளுப் பயறு அதிகம் சாப்பிட்டால் திடமான மெல்லிய உடலை பெறலாம். 

பூச்சிக்கடிவலி :

 எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி வீக்கம் போன்றவை ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும் சிறிது நேரத்தில் வீக்கம் வற்றி வலியும் குணமாகும். 

சீத பேதி :

 சீதபேதி கடுமையாக உள்ளதா ? ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

மலச்சிக்கல் : 

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள் ஜீரணத்துக்கு உதவும். வாயுவை அகற்றும். அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால், பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். 

Categories

Tech |