Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மீண்டும் ஓரு சம்பவம்” போலீஸ் தாக்கியதால் கூலித்தொழிலாளி தற்கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தைத் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை நடத்திய வியாபாரிகளான ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், தூத்துக்குடி காவல் அதிகாரிகள் குறித்த புகார்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் கூலித் தொழிலாளி கணேசமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கணேசமூர்த்தி உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், எட்டயபுர காவல் நிலைய அதிகாரிகள் தாக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகத்தான் கணேசமூர்த்தி உயிரிழந்ததாகவும், அவரது உயிரிழப்புக்கு உரிய நீதி வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |