பிரிட்டன் இளவரசர் ஹரி, எல்டன் ஜான் மற்றும் பலர் டெய்லி மெயில் நிறுவனத்தின் வெளியீட்டாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளன.
செய்தி நிறுவனமான டெய்லி மெயில் அதன் தலைப்புகளில் சட்டவிரோதமான தகவல்களை சேகரித்ததாகக் கூறி அதன் வெளியீட்டாளர் மீது ஆறு பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் பாடகர் எல்டன் ஜான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் மற்றவர்களில் லிஸ் ஹர்லி, சாடி ஃப்ரோஸ்ட், ஜானின் கணவர் டேவிட் ஃபர்னிஷ் மற்றும் கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் லாரன்ஸின் தாயார் டோரீன் லாரன்ஸ் ஆகியோரும் அடங்குவர் என உள்நாட்டு செய்தி நிறுவனமான PA அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வழக்கு தொடர்ந்துள்ள இந்த குழுவிற்கான சட்ட நிறுவனமான ஹாம்லின்ஸ்(Hamlins) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “அசோசியோட்டட் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட் Associated Newspapers Limited (ANL) மூலம், அவர்கள் குற்றச் செயல்கள் மற்றும் தனியுரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான கட்டாய மற்றும் வேதனையான ஆதாரங்களை வழக்கு தொடுத்து இருப்பவர்கள் வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் மெயில் ஆன்லைன் மற்றும் தி மெயில் ஆன் சண்டே ஆகியவற்றின் வெளியிட்டாளரான ANL வியாழக்கிழமை அன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். ஹம்லின்ஸ், ANLக்கு எதிராக வெளியேற்றுள்ள சட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையில் கூறியதாவது, “கார்கள் மற்றும் வீடுகளுக்குள் ரகசியமாக ஒட்டுக் கேட்கும் சாதனங்களை வைப்பதற்கு தனியார் புலனாய்வாளர்களை பணியில் அமர்த்துவது, தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தல் முக்கியமான தகவல்களுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் செலுத்துதல் மற்றும் மருத்துவப் பதிவுகளைப் பெற தனிநபர்களை போல ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவை நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத செயல்கள்” என்று அவர் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சட்ட நிறுவனமான ஹாம்லின்ஸ் இளவரசர் ஹாரி மற்றும் ஃப்ரோஸ்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதே சமயத்தில் லாரன்ஸ், ஹர்லி, ஜான் மற்றும் ஃபர்னிஷ் ஆகியோர் சட்ட நிறுவனமான கன்னர்குக் (Gunnercooke) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மேலும் பிரிட்டன் போன் ஹேக்கிங் ஊழல், செய்தித்தாள்களில் சட்டவிரோதமான செயல்பாடுகள் தொடர்பாக பல சேதங்கள் கோரப்பட்டுள்ளன, இத்தகைய பல உரிமைகோரல்களில் பெரும்பான்மையாக தீர்க்கப்பட்டு விட்டாலும் ANLக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதல் கோரிக்கை இதுவாகும்.இந்த சட்டவிரோத செயல்பாடுகளால் முர்டோக்-க்கு சொந்தமான நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.