சந்தானத்தின் ‘டகால்டி’ பட ரிலீஸையொட்டி அவரது ரசிகர்கள் டிஜிட்டல் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சந்தானத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லுக்கு துட்டு 2’, ‘ஏ1’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வசூல் வேட்டையாடியது. இதற்கிடையே விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.
இந்த நிலையில், டகால்டி படத்தின் வெளியீட்டையொட்டி காலை முதல் சந்தானத்தின் ரசிகர்கள் திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதுதவிர சேலத்தில் உள்ள சந்தானம் ரசிகர்கள் அவருக்கு டிஜிட்டல் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
அது மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள சந்தானம் ரசிகர்கள் அவரது புகைப்படம் போட்ட பூந்தொட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.
#DagaaltyFromToday Salem omalur @iamsanthanam fans celebration @salem_santa @ThalaRanjith16 @MechSabari1997 @MahiSanta @vijayanans @SenRittika @iYogiBabu @sathishmsk #Dagaalty 😎😎 pic.twitter.com/lTjmEAojXO
— ༺SANTA Karthick༻ (@Karthick_Santa) January 31, 2020