Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா கூட இணைச்சுடீங்க…. எழுப்புவோம் வாங்க…. ரஜினிக்கு நன்றி சொன்ன உதய் …!!

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதில், தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்தார்.

இதனை டேக் செய்துள்ள உதயநிதி ஸ்டாலின் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை  எழுப்பும் தலைவர் முக.ஸ்டாலினின்  தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்ந் அவர்களுக்கு நன்றி என உதயநிதி பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |