சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடம்பெற்றுள்ள , டேவிட் வார்னரின் மகள் இவி வரைந்த படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ,ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, பல வருடங்களாக இருந்து வந்த டேவிட் வார்னர் , திடீரென்று கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
இதனால் அவரது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றுள்ள ,ஆஸ்திரேலிய வீரர்கள் நாட்டிற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியில் பங்குபெற்று உள்ள வீரர்கள் , மே 15ஆம் தேதிக்கு பிறகு நாடு திரும்ப முடியும். இந்த நிலையில் டேவிட் வார்னரின் மகளான இவி , தனது தந்தைக்காக வரைந்துள்ள படம் ,தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது. அதில் ‘அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வாங்க , உங்கள ரொம்ப மிஸ் பண்ணுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.