சுர்ஜித் மீட்புப்பணி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அனைவரையும் கண்கலங்க வைக்கின்றது.
திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 42 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 100 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் அருகே அதே போல மற்றொரு பள்ளம் தோண்டி அதன் மூலம் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது. பள்ளம் தோண்டும் பணியில் 25 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரம் மூலமாக 5 மணி நேரம் துளையிடும் பணி நடைபெற்று வருகின்றது.
பாறைகள் இருப்பதால் இரண்டாவதாக மற்றொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. முதலில் வந்த ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் கருவி வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வருகின்றது. இதனிடையே சுர்ஜித் நல்ல முறையில் மீட்கப்பட்ட வேண்டும் என்று மசூதிகள் , தேவாலயங்கள் என மத பாகுபாடு இன்றி மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் தீபாவளி வேண்டாம் சுர்ஜித் மட்டும் போதும் என்ற ஏக்கத்தோடு சுர்ஜித்துக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரின் கண்களையும் கலங்கச் செய்துள்ளது . அப்போது வீட்டில் உள்ள TV_யில் சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் செய்தியை பார்த்த ஒரு குழந்தை தனது அப்பாவிடம் சிறுவன் சுர்ஜித் புகைப்படத்தை காட்டி அப்பா கூப்பிடு வா…!! அப்பா கூப்பிடு வா என்று அழைப்பது காண்போரை கண்கலங்க வைக்கின்றது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/GuganGA/status/1188294274900643840