செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிமியாட் போட்டி நிறைவு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோ இடம்பெற்றது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவரும் சரி, புரட்சித்தலைவி அம்மாவும் சரி அவர்கள் தமிழ்நாட்டினுடைய ஒரு சிற்பிகள்.
தமிழ்நாட்டை முதன்மையான அளவிற்கு வெற்றி நடை போட்டு, வீரநடை போட்டு, சமூகநீதியை காத்து, ஏழை எளிய மக்களுக்கும் சரி,அதே போன்று ஆதிதிராவிட மக்கள், பழங்குடியினர்கள், பின்தங்கியவர்கள், சீர் மரபினர்கள் இப்படி எல்லா தரப்பட்ட மக்களுடைய அன்பை பெற்றவர்.
எனவே அவர்களை யாராலும் மறைக்க முடியாது, கண்டிப்பாக அவர்கள் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தி, கண்டிப்பாக வைத்து தான் ஆக வேண்டும். அதே நேரத்தில் வந்து ஆரம்ப காலத்தில் இருந்து இருந்த முதலமைச்சர்கள் எல்லாம் அவர்கள் புகைப்படங்களை ஏன் வைக்கவில்லை ?
ஓமந்தூரார், பிஎஸ் குமாரசாமி ராஜா, பக்தவச்சலம், திருமதி ஜானகி அம்மாள் அதேபோன்று இடைக்கால முதலமைச்சர் நாவலர் அவர்களோடு பங்கு ஒன்றுமே இல்லையா தமிழ்நாட்டில் ? அவர்கள் புகைப்படம் வைக்கவில்லை, அம்மாவிற்கு பிறகு அண்ணன் எடப்பாடியார் இப்படி பல்வேறு வகையிலேயே இன்றைக்கு முதலமைச்சர்களாக இருந்தவர்,
அவர்கள் பங்காற்றும்போது ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல் வைப்பது வந்து நல்ல விஷயம். அதை அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் அப்பாவுடைய புகைப்படம் அங்கே வைக்க வேண்டும் என்பதற்காகவே எல்லாம் வைத்த மாதிரி தெரிகிறது என தெரிவித்தார்.