Categories
சினிமா தமிழ் சினிமா

‘D43’ படத்திலிருந்து விலகிய கார்த்திக் நரேன்… தானே இயக்கி நடிக்கும் தனுஷ்?…!!!

தனுஷின் D43 படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Dhanush's Next To Be Directed By Karthick Naren - Telugu Dhanush -TeluguStop

இந்நிலையில் தனுஷுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என தகவல் பரவி வருகிறது. மேலும் தனுஷ் இந்த படத்தை தானே இயக்கி நடித்து வருவதாகவும், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து விளக்கமளித்த படக்குழு தனுஷ், கார்த்திக் நரேன் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் இந்த படத்தை கார்த்திக் நரேன் தான் இயக்கி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |