Categories
உலக செய்திகள்

சுழன்று சுழன்று அடித்த சூறாவளி… 25 பேர் மரணம்… பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 25 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று பயங்கர சூறாவளி அடுத்தடுத்து சுழன்று கொண்டு கடுமையாக தாக்கின.

Image result for Tennessee

அப்போது சுழன்றடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள் கடுமையான சேதமடைந்ததுடன், கட்டிடங்களின் கூரைகள் பிய்த்து வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Image result for Tennessee

மேலும் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான மக்களைக் காணவில்லை என்பதால் இறப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |