வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. இதனை ஒட்டி ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.வரும் 25ஆம் தேதி வங்கதேச கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்குகடல், அந்தமான் கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக உள்ளது.