குடும்பத்தினருடன் சேர கல்லூரி மாணவன் 3218 கிலோமீட்டர் தூரம் 7 வாரங்கள் பயணம் செய்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா தொற்று பரவலை தடுக்க பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் சென்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த க்லியான் என்ற மாணவன் 3218 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரீஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்வதற்கு முடிவு செய்துள்ளார். அதனால் ஊரடங்கு காரணத்தினால் போக்குவரத்துகள் முடங்கியுள்ள நிலையில் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு தங்குவதற்கு கூடாரம், உணவாக பிரட், வெண்ணை போன்றவற்றை தயாராக பேக் செய்து கொண்டு தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
சாகச பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட க்லியான் ஏழு வாரங்கள் பயணம் செய்து 3218 கிலோமீட்டர் தூரத்தை கடந்து தனது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார். சாலையில் பல தடைகளை சந்தித்து பலமுறை சைக்கிள் டயர் பஞ்சர் ஆனாலும் இறுதியாக தனது வீட்டிற்கு வந்தடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “இது ஒரு தனித்துவமான பயணமாகவே இருந்தது. அனைத்து பிரச்சினைகளும் சரியான பிறகு விமானத்தில் கல்லூரிக்கு பறந்து செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்