காமன்வெல்த் இறுதி போட்டியில் இந்திய அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 2022 காமன்வெல்த் போட்டிகள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்த நிலையில், குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி எட்ஜ்பஸ்டன் நகரில் தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதேபோல 2ஆவது அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி..
இந்நிலையில் நேற்று எட்ஜ்பஸ்டன் நகரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 61 (41) ரன்களும், மெக் லானிங் 36 (26) ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் களமிறங்கிமனர். எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி 2ஆவது ஓவரில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத்தொடர்ந்து ஷபாலி வர்மா 3ஆவது ஓவரில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.. அதன்பின் ரோட்ரிக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்..
இதையடுத்து 16ஆவது ஓவரில் 4ஆவது பந்தில் 1 ரன்னில் பூஜா ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் ஹர்மன் ப்ரீத் கவுரும் 43 பந்துகளில் 65 ரன்கள் (7 பவுண்டரி, சிக்ஸர்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது இந்திய அணி. இதனால் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.. ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை தட்டியுள்ளது.
That golden moment 🥇 #AUSvIND #B2022 pic.twitter.com/McbrmJnOEJ
— cricket.com.au (@cricketcomau) August 7, 2022