விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமடைந்தவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு ஏராளமான வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அவ்வகையில் தற்போது என்ன சொல்ல போகிறாய் எனும் திரைப்படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இவரது நடிப்பில் வெளிவந்த குட்டி பட்டாஸ் பாடல் வெளியாகியது முதல் சாதனைகளை படைத்து வருகிறது. அவ்வகையில் தற்போது 125 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதனால் அஸ்வின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.