Categories
உலக செய்திகள்

சுயநலவாதிகளே….. கொரோனா உங்களுக்கான அறிகுறி…… பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து….!!

சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன்  அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா வைரஸ் குறித்தும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளரான ஜோச்சும் லோ இந்த வைரஸ் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதன் அறிகுறியாக கொரோனோ வைரஸ் இருப்பதாகவும், லாப நோக்கு, பேராசை, அதிகாரம் என்று இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நோய்த்தொற்று உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இனியாவது மக்கள் திருந்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |