பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் “ராதே ஷ்யாம்” படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பல கோடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பிரபாஸ். இவர் தற்போது ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் “ராதே ஷ்யாம்” படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் உள்ள அழகான பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தின் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.