Categories
மாநில செய்திகள்

வாடிக்கையாளர்களே! இதை செய்யாவிட்டால்…. அரசு மானியங்களை பெற முடியாது…. எஸ்பிஐ அறிவிப்பு…!!

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்கவிட்டால் அரசின் மானியங்களை பெற முடியாது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

ஆதார் என்பது தனிநபர் அடையாள அட்டை ஆகும். இது அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, பான் கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. இவ்வாறாக தனிநபர் சார்ந்த அனைத்து செயல்களுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசு மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்றால் உடனடியாக உங்களுடைய ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்து விடுங்கள் என்று வெளியிட்டுள்ளது.

நீங்கள் நேரடியாக சென்று உங்களுடைய வங்கி கணக்கில் ஆதாரை இணைக்கலாம். பாஸ் புக் மற்றும் ஆதார் நகலை கொடுத்து அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சுலபமாக இணைத்துக்கொள்ளலாம். உங்களுடைய வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்ட உடன் அது குறித்த தகவல் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வரும். உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள செல்போன் எண்ணும், ஆதாரில் உள்ள செல்போன் வேறுவேறாக இருந்தால் இணைப்பதில்  பிரச்சனை ஏற்படும்.

ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம்:

எஸ்பிஐ வங்கி இணையதளம் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம். https://www.sbi.co.in/ என்ற முகவரியில் சென்று link your aadhaar number என்ற வசதியின் கீழ் சென்று இணைக்கலாம்.

www.onlinesbi.com என்ற நெட் பேங்கிங் முகவரியில் My accounts என்ற வசதியில் சென்றும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம்.

எஸ்பிஐ வங்கி செல்போன் செயலி மூலமாகவும் ஆதாரை உங்களால் வங்கிக் கணக்குடன் இணைக்க முடியும்.

Categories

Tech |