பிரித்தானிய நாட்டிலிருந்து பிரான்சுக்கும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் செல்வதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருந்தாலும் அவர்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பிரான்சுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் கொரோனா அறிகுறி இல்லை என்பதற்கான சான்றிதழையும், தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வருவோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றால் கடந்த 24 மணி நேரத்தில் செய்துகொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்.
அதே சமயம் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஒரு வாரம் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தால் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியேற்றபடுப்பார்கள்.