கடுமையான வெயில் மற்றும் பலத்த காற்றின் விளைவால் நீண்ட நேரம் மின்சாரமின்றி தேனி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடைகால ஆரம்பநிலையிலேயே தேனியில் பலத்த காற்றும் கடுமையான வெயிலும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. காலையிலிருந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையில் இருந்த மணலும் காற்றோடு கலந்து , இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில் விழுந்ததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினார்கள்.

பலத்த காற்று வீசியதால் தேனியில் உள்ள கடைகளில் இருந்த பெயர் பலகைகள் அனைத்தும் தூக்கிவீசப்பட்டது .இதனால் காலையில் இருந்தே அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மேலும்
மின்சாரம் வருவதும், துண்டிக்கப்படுவதுமாக இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பகலில் ஏற்பட்ட மின்தடையால் வீடுகளில் சமையல் வேலைகளும் பாதிக்கப்பட்டது.