Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு உத்தரவு …!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பது ஒரே இரவில் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தீவிரவாத ஒழிப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு மற்றும் பணத்தை பதுக்குவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் சொல்லியிருந்தார்.

இருப்பினும் இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்பது தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இன்றைய தினம் இந்த வழக்கு விரிவான விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்க்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது நிர்வாக ரீதியிலான விவகாரம். நீதிமன்றம் தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இருப்பினும் வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றது.

மூத்த வழக்கறிஞர் பா.சிதம்பரம் அவர்கள் மனுதாரர் சார்பாக ஆஜராகி, இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரே இரவில் இப்படியான அறிவிப்பை வெளியிடுவதற்கு என்ன நடைமுறை இருக்கிறது ? அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டு இருக்கிறதா ? உள்ளிட்டவற்றை விசாரிக்க வேண்டும் என விரிவான வாதத்தினை முன் வைத்தார். இறுதியாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவெடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விரிவான பிரம்மாண பத்திரத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனம் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு எழுதிய கடிதம். ரிசர்வ் வங்கியில் எடுக்கப்பட்ட முடிவு.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது உள்ளிட்ட முக்கிய விவரங்களுக்கான தகவல்களை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் கேட்டுக் கொண்டுள்ளது.

500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் 106 பிரிவின் கீழ் அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா ? இந்த அறிவிப்பில் முக்கியமான வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு இருக்கிறதா? நியாயமான வழிமுறைகளா ?  உள்ளிட்டவை எல்லாம் விசாரிக்க வேண்டி இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள். எனவே இதற்கான பதிலை தான் மத்திய அரசும்,  ரிசர்வ் வங்கியும் வழங்கி இருக்கிறார்கள். வழக்கு நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |