கியூரியாசிட்டி ரோபோ செவ்வாய் கிரகத்தில் சிறிய மலை உச்சி ஒன்றை படம் பிடித்துள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செந்நிற கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கினர். பின்பு நவம்பர்26, 2011 அன்று இந்த ரோபோ புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 ஏவுகணை மூலம் அனுப்பப்பட்டு 2012 ஆகஸ்ட் 6ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த ரோபோவானது செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து அடிக்கடி ஆச்சரியம் மூட்டும் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்ற நிலையில் தற்போது புதிதாக செவ்வாய் கிரகத்தில் கேல் கிரேட்டர் என்ற பகுதியில் சிறிய மலை உச்சி ஒன்றினை படம் எடுத்து அனுப்பியுள்ளது. இப்படமானது கருப்பு, வெள்ளை நிறத்தில் இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.