கர்நாடகத்தில் கோலார், உடுப்பி, குடகு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நிபந்தையுடன் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தொழிற்சாலைகள் 50% ஊழியர்களை வைத்து செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. கர்நாடகாவில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் கலாபுராகி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது. அதில், 198 பேர் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் சுமார் 14 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலைகள் செயல்படவும், கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஊரடங்கு வருகிற மே மாதம் 3-ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏற்கனவே மாநில அரசு அறிவித்தது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக கடந்த 22-ம் தேதி திடீரென மாநில அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுததிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்வும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.