Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக திறக்கப்பட்ட சலூன் கடை… சீல் வைத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு தடையை மீறி  திறக்கப்பட்ட முடி திருத்தும் கடைக்கு மண்டல அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் சென்னையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொற்று பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் மெயின் ரோட்டில் இருக்கும் முடிதிருத்தும் கடை ஒன்று உத்தரவை மீறி திறக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல அலுவலர் கூறியதாவது “எங்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக சென்று கடைக்கு சீல் வைத்து விட்டோம்.

மாநகராட்சியில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை கடை சீலில் தான் இருக்கும். யாரும் அந்த கடையில் முடி திருத்தம் செய்து கொள்ளாததால் யாரையும் கொரோனா பரிசோதனை செய்யவில்லை” என தெரிவித்தார். இதேபோன்று அரும்பாக்கம் மற்றும் வளசரவாக்கத்தில் தடை உத்தரவை மீறி முடிதிருத்தும் கடையைத் திறந்து வைத்த உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |