Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு : வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியர் திருமணம்!

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய முறையில் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடத்த இருந்த சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, வீட்டிலேயே திருமணத்தை சிறப்பாக நடத்தியிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவருமே முகக் கவசம் (மாஸ்க்) அணிந்தபடியே திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |