சென்னை வேளச்சேரி குருநானக் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” கொரோனா நோய் தடுப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது தலைமையில் மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54% ஆக அதிகரித்துள்ளது.
வீடு வீடாக சென்று நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் வீதி வீதியாக ஒலிபெருக்கிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊரடங்கின் மூலம் கொரோனா நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என முதல்வர் கூறியுள்ளார்.