உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற ஒற்றைச் சொல்லுக்கு அஞ்சி நடுங்கி முடங்கிக் கிடக்கின்றது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை விட்டுவைக்காத கொரோனா இந்தியாவையும் பதம் பார்த்துள்ளது. இந்தியாவில் 28 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதில் 6 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 886 பேர் மரணமடைந்தனர்.
மகாராஷ்டிரா அதிகம் பாதிப்பு :
கொரோனா பாதிப்பாக மகராஷ்டிராவில் 8068 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1,188 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 342 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல குஜராத்தில் 3545 பேருக்கும், டெல்லியில் 3108 பேருக்கும், ராஜஸ்தானில் 2262 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 2165 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 1986 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு :
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கும்போதே மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. முதலில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு, அதனைத் தொடர்ந்து மேலும் 19 நாட்கள் நீடித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு என அறிவித்தது.
ஊரடங்கு நீட்டிப்பு :
ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கொரோனவை கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் கொரோனா :
இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1937 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தமிழக அரசால் மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.
இந்தியாவிலே தமிழகம் பெஸ்ட் :
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீரிய நடவடிக்கைகள் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதலே மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மற்ற நாடுகளில் இருந்து ஆர்டர் செய்து தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகத்துக்கு மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்ற அதிக பரிசோதனை மையங்களும் சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டன. இதன் விளைவாகத்தான் இன்று அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலில் மகாராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி எதிர்கொள்வது ?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்க படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அதேவேளையில் எத்தனை நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற ஒரு கேள்வி பாமர மக்களிடையே எழுந்துள்ளது. இன்று தனி நபர்கள், பொதுமக்கள் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி போயுள்ளன. இதனால் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என்றால் அதனை பொதுமக்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்க நாம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 2 மாத நீட்டிப்பா ?
ஊரடங்கு நீட்டிப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்தது. அதனால் ஊரடங்கு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதோ என்ற கேள்வியை அனைவரின் மனதிலும் எழுப்புகின்றது தமிழக அரசு சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ஏப்ரல் முதல் ஜூன் என 3 மாதங்களு, கூடுதலாக 5கிலோ அரிசியை ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசத்தும் தமிழக அரசு :
மூன்று மாதங்களுக்கு சேர்த்து கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்ற உத்தரவு பாமர மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. என்னவென்றால் ஊரடங்கு கட்டாயம் நீட்டிக்கப்படும் ஆனால் அது இரண்டு மாதமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசு ஜூன் வரை அரிசி கொடுப்பது இப்படியான ஒரு கேள்வியை சாமானியர்கள் மனதில் எழுப்புகின்றது. இருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், அதே நேரத்தில் தமிழக அரசு முழு மூச்சுடன் கொரோனாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தினை நடத்தி மக்களைக் காப்பதில் கவனம் செலுத்தி அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.