Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கை 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை…. நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து நேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, நிலைமையை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை கொரோனா தடுப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ள நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சுழலில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |