தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தனியார், சுயநிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தடை தொடரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முக்கியமான கடைகளை திறக்க நேர அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காய்கறி கடைகளை காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க வேண்டும். மேலும் மளிகை கடைகளில் 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மக்கள் பொருள் வாங்கலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.