ஜூன் 7 க்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் சில தளர்வுகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
மேலும் ஜூனுக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பது தேவையில்லை என்றும் ஜூன் இறுதிக்குள் இரண்டாம் அலை குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கலாம். எனவே கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.