Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு….? இன்று மதியம் 3 மணிக்கு…… முக்கிய ஆலோசனை…..!!

கொரோனா தடுப்பு பணி குறித்து இன்று மதியம் 3 மணி அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்ட நிலையில் ஊரடங்கு கடுமையாக நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தது. இதையடுத்து பாதிப்பு குறைவான இடங்களில் ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக, ஒரு சில தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கை  நீட்டித்து  அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும்  மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த கூட்டத்தில்  ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள் குறித்தும்  முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories

Tech |