கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை மீண்டும் தொற்று தாக்கி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு பதில் இல்லை என கூறியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதார மைய பணியாளர் மைக் ராயன் தெரிவித்ததாவது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை. சிலருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகாததை தொடர்ந்து மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனகூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணம் ஆன ஒருவருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ள பொழுது கொரோனா தொற்று ஏற்படுமானால் அது கேள்விக்குறியாகவே இருக்கக்கூடும் என உலக சுகாதார மையத்தின் விஞ்ஞானியான மரியா பென் கேர்க்கோவ் தெரிவித்துள்ளார். அதனால் இந்த தொற்று குறித்து அதிகம் ஆராயப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.