நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களிலும், வெளிநாடுகளிலும் 9 நகரங்களிலும் என மொத்தம் 489 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. CUET அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in என்ற பக்கத்தில் பாக்கலாம்.