நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முடிவுகள் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நாட்டிலுள்ளநாட்டிலுள்ள மத்தியபல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை நுழைவு தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் வருகின்ற 15-ம் தேதிக்குள் அல்லது அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக தேர்வு முடிவை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.சமீபத்தில் தேர்வின் உத்தேச விடை குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.