மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு CUET நடத்தப்படுகிறது. 2022 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புக்கான க்யூட் தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்தது.அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மறு வாய்ப்பாக ஆகஸ்ட் 24 முதல் 30-ஆம் தேதி வரை நடக்கும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும் CUET நுழைவுத் தேர்விற்கான அட்மிட் கார்டுகள் வெளியானதும் மாணவர்கள் cuet.samarth.ac என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், CUET தேர்வு மற்றும் தேர்வு மையங்கள் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் இணையத்தளத்திலேயே அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.