Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

கடலூரில் 16.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது …!!

புதுச்சேரியின் வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் – புதுவை பகுதியில் அதீத கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ. முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீச தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8.30  முதல் 10.30 வரை கடலூரில் 16.3 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 14.9 சென்டிமீட்டர், சென்னையில் 8. 9 சென்டிமீட்டர், காரைக்காலில் 8.1 சென்டிமீட்டர்,  நாகை மாவட்டத்தில் 5.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |