Categories
பல்சுவை

நீரில் மூழ்கிய குட்டிகள்… உயிரை பணயம் வைத்து மீட்ட எலி… தாய் பாசத்தை கண்முன் நிறுத்திய வைரல் வீடியோ..!!

வளைக்குள் வெள்ளம் புகுந்து விட தனது குட்டிகளை தாய் எலி உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய காணொளி சமூகவலைதளத்தில்

கடந்த சனிக்கிழமை அன்று திருப்பூரில் சுமார் ஒரு மணி நேரம் நன்றாக மழை பெய்த நிலையில் பெருக்கெடுத்து சாலையில் ஓடிய வெள்ளம் ஒரு எலி வளைக்குள் புகுந்தது. இதனைத்தொடர்ந்து வளைக்குள் குட்டிகள் இருக்க மழைநீரில் மூழ்கிய குட்டிகளை காப்பாற்றுவதற்கு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தாய் எலி ஒவ்வொரு குட்டியாக காப்பாற்றி கொண்டு வந்தது.

இந்த காட்சியை மழைக்கு ஒதுங்கி நின்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் இதுதான் உண்மையான தாய் பாசம் என்றும் இந்த ஆபத்தை எதிர்கொள்ள தாய் மட்டுமே தயாராக இருப்பார் என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |