Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022: ‘தோல்விக்கு காரணம் இதுதான்’….! கண்டிப்பா திரும்ப வருவோம்..!! கெத்தா பேசிய ஜடேஜா….!!!

ஐபிஎல் 15 வது சீசன் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தெரிவு செய்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இறப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 211 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடியது. இதில் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஐபிஎலில் தனது முதல் வெற்றியை பதித்தது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேசுகையில். “எங்களிடையே நல்ல தொடக்கம் இருந்தது. மொயின் அலி, ராபின் உத்தப்பா, சிவம் துபே ஆகியோர் அருமையாக விளையாடினார். ஆனால் நாங்கள் பந்துகளை கேட்ச் பிடிப்பதில் தான் தவறவிட்டு விட்டோம். இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம். பனி காரணமாக பந்து வீரர்களின் கையில் சிக்கவில்லை. இனிமேல் ஈர பந்துக்களுடன் நாங்கள் பயிற்சி செய்வது அவசியம். நாங்கள் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல நினைத்தோம். பிராவோ மிக சிறப்பாக பந்து வீசினார். எங்களிடையே நல்ல திட்டங்கள் இருந்தும் அதனை செயல்படுத்த முடியாமல் நாங்கள் தவறவிட்டு விட்டோம். அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |